pooja-homam-booking

கும்பாபிஷேகத்தின் அர்த்தம் என்னவென்றால்?..

கும்பாபிஷேகத்தின் அர்த்தம் என்னவென்றால்

கும்பாபிஷேகம்:கும்பாபிஷேகம் என்பது புதிய சிலை நிர்ணயம் செய்யும் பொழுது செய்யக்கூடியவை மற்றும் ஏற்கனவே இருக்கக்கூடிய கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யக்கூடிய கிரியை. கும்பாபிஷேகத்தின் அர்த்தம் என்னவென்றால் சுவாமிக்கு சக்தியை உரு ஏற்றும் கிரியையே கும்பாபிஷேகம் ஆகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம்

இந்த கும்பாபிஷேகம் செய்வதற்கு அனைவருக்கும் பாக்கியங்கள் கிடைக்காது. கோடிகோடியாக பணம் வைத்திருந்தாலும் இந்த பாக்கியங்கள் கிடைக்காது. யார் ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெற்று இருக்கிறதோ அவர்கள் மட்டுமே இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவோ அல்லது கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தும் கூடிய சக்தியை சுவாமி அவருக்கு வழங்குகிறார்.

கும்பாபிஷேகம் நான்கு வகைப்படும்

கும்பாபிஷேகம் நான்கு வகைப்படும் ஒன்று ஆவர்த்தனம் அதாவது புதிதாக ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு பெயர் ஆவர்த்தனம் ஆகும்.

இரண்டாவது அனாவர்த்தம் ரொம்ப நாட்களாக பூஜைகளே இல்லாமல் ஆறு கடல் போன்ற இயற்கை சீற்றங்களினால் கோவில் சேதம் அடைந்திருந்தால் அந்த கோவிலை புதிதாக நிர்மாணம் செய்து செய்யக்கூடிய கிரியை.

மூன்றாவதாக புனராவர்த்தனம் கோவில் கர்ப்பகிரகத்தில் அல்லது கோவில் பீடத்தில் சிலையில் ஏதேனும் சேதம் அடைந்திருந்தால் கோவிலில் உள்ள ஏதாவது வேலைகள் செய்ய வேண்டியது இருந்தால், சுவாமியை பாலஸ்தாபனம் என்று சொல்லக்கூடிய பாலாலயம் செய்து வைத்துவிட்டு கோவிலில் புதிதாக எல்லாவற்றையும் மாற்றி அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்படும்.

நான்காவதாக அந்தரிதம் என்று சொல்லக்கூடிய கோவிலில் தேவையற்ற விஷயங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அதில் அதற்காக செய்யக்கூடிய பரிகார பூஜையை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யக்கூடியது பெயர் அந்தரிதம் கும்பாபிஷேகம் எனப்படும்.