sree-sudharshana-mahavishnu-homam-benefits – ஸ்ரீசுதர்சன மகா விஷ்ணு ஹோமம் செய்வதன் பலன்கள்
ஸ்ரீசுதர்சன மகா விஷ்ணு ஹோமம் செய்வதன் பலன்கள்: வியாபாரம் ஆரம்பிக்கும் பொழுது கடைகளிலே இந்த சுதர்சன ஹோமம் செய்தாள் வியாபாரம் நல்லபடியாக நடைபெறும் அதுபோக வீடுகளில் இந்த ஹோமங்கள் செய்தால் வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட சக்திகள் வெளியேறி அதுபோக பில்லி சூனியம் ஆபிசார தோஷம் என்று சொல்லக்கூடிய அந்த தோஷங்களில் இருந்து விடுபட கூடியவை போன்ற சிறப்புகள் உண்டு.
அதுபோக சுதர்சன மகாவிஷ்ணு மூல மந்திரத்தில் மந்திரத்தினால் எந்திரத்தின் ஆள் தந்திரத்தின் ஆல் செய்யக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளும் நிவர்த்தியாகும். சுதர்சன மகாவிஷ்ணு கையில் வைத்திருக்க கூடிய சக்கரம் எதிரியை அழித்து விட்டு வருமாம் எதிரியை அழிப்பது என்றால் எதிரியை அழிப்பது அல்ல எதிரிகளுடைய எண்ணங்களை அளிப்பதே அதன் அர்த்தமாகும்.
அப்படிப்பட்ட சுதர்சன மகாவிஷ்ணுவின் ஹோமம் செய்தால் அனைத்து வகையான நன்மைகளும் கிட்டும். சுதர்சன மகாவிஷ்ணு ஹோமம் செய்யும் பொழுது மகாலட்சுமி பூஜை சேர்த்து செய்தால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும்.

