நவக்கிரஹ ஹோமம் செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள்
நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய ஒன்பது கிரகங்களும் 9 வகையான பலன்களைக் கொடுக்கக்கூடியது. நவக்கிரக ஹோமம் செய்வதால் நம்மளுடைய நவகிரக தோஷங்கள் எல்லாம் நீங்கி எல்லா வகையான நன்மைகளும் நடைபெறும் அதற்காக நவக்கிரக வேள்வியானது செய்து நவகிரகத்தின் பரிபூரண அருளும் ஆசியும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கிடைக்கும்.
1.சூரியன்.
சூரியன் என்பவர் தலைமைக் கழகம். தந்தை ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர். பித்ரு தோஷங்களை நீக்கக் கூடியவர். அரசாங்க உத்தியோகத்திற்கு அரசாங்கம் சம்பந்தமான விஷயங்கள் நமக்கு கிடைப்பதற்கு வழி வகுக்கக் கூடியவர்.
2.சந்திரன்
சந்திர பகவான் இவர் மனோக்காரகர். தாய் ஸ்தானத்தை உடையவர். நம் மனநிலையை நிம்மதியாக வைத்திருக்க உதவுவது இந்த சந்திர பகவான்.
3.செவ்வாய்
மூன்றாவது கிரகம் செவ்வாய் இவர் சகோதர ஸ்தானத்தை உடையவர். பூமிகாரகன் ஒரு இடம் வாங்க வேண்டும் வீடு வாங்க வேண்டும் அப்படி என்றால் செவ்வாயுடன் அனுகிரகம் கிடைக்க வேண்டும்.
4.புதன்
நாலாவது கிரகம் புதன், தாய்மாமன் ஸ்தானத்தை உடையவர். அதுபோக குழந்தைகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க கூடியவர். ஞாபகசக்தி கொடுக்க கூடியவர்.
5.குரு
ஐந்தாவது கிரகம் குரு என்றால் நவகிரகத்தில் வடக்கு பார்த்து இருப்பவர் தான் இந்த குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வெளிப்படுத்த கூடியவர்கள். புத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய குழந்தை பாக்கியத்தை கொடுக்கக் கூடிய வல்லமை பெற்றவர்.
6.சுக்கிரன்
ஆறாவது கிரகம் சுக்கிர பகவான் களத்திர காரகன் கல்யாணத்தை கொடுக்கக்கூடியவர். அதுபோக 16 வகையான செல்வத்தை கொடுக்கக்கூடியவர். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லக்கூடிய அதற்கேற்றார்போல் 16 வகையான செல்வத்தையும் கொடுக்கக்கூடியவர்.
7.சனி
ஏழாம் கிரகம் சனீஸ்வரர் அவர் நம்முடைய ஆயுளை நிர்ணயிக்க கூடியவர். ஆயுள்காரகன் நம்முடைய தொழிலை நிர்ணயிக்க கூடியவர். அதுபோக ஏழரைச் சனி அட்டமச் சனி அர்தாஷ்டம சனி கண்டகச் சனி பாத சனி விரயச் சனி என அனைத்து வகையான சனி தோஷங்களையும் நீக்க கூடிய வல்லமை பெற்றவர்.
8.ராகு
எட்டு ஒன்பதாவது கிரகங்கள் ராகு-கேது ஒரு பாம்பின் வடிவம் தலைப் பகுதி கேதுவாகவும் வால் பகுதி ராகுவாகும் பாவிக்கப்பட்டு ஏழு கிரகத்துடன் வருவார்கள் ராகு பகவான் ஞானகாரகன். ஞானத்தைக் கொடுக்க கூடிய வல்லமை பெற்றவர். அதுபோக வெளிநாட்டு பயணங்களுக்கு அதிபதி. ராகு பகவான் அனைத்து வகையான தோஷங்களின் நீக்கக் கூடியவர். சர்ப்பதோஷம் மற்ற தோஷங்களை நீக்க கூடிய வல்லமை பெற்றவர்.
9.கேது
ஒன்பது கிரகம் கேது பகவான் இவர் மோட்ச காரகன் அதுபோக கோ சாபம், பிராமண சாபம், கன்னி சாபம், சுமங்கலி சாபம், பல சாபங்களிலிருந்தும் விமோசனம் கொடுக்கக் கூடிய வல்லமை பெற்றவர் கேது பகவான்.
நவக்கிரக ஹோமம் செய்வதால் நம்மளுடைய நவகிரக தோஷங்கள் எல்லாம் நீங்கி எல்லா வகையான நன்மைகளும் நடைபெறும் அதற்காக நவக்கிரக வேள்வியானது செய்து நவகிரகத்தின் பரிபூரண அருளும் ஆசியும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் கிடைக்கும்.