homam-types

மகா கணபதி ஹோமம் செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள்

ஸ்ரீ மகா கணபதி ஹோமம் செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள்

ஸ்ரீ மகா கணபதி ஹோமம் செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள்: 
1. காரிய தடைகள் நீங்கும்
2.நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும்

நாம் எந்த காரியங்கள் தொடங்கினாலும் முதலில் விநாயக பெருமானை வழிபாடு செய்கிறோம். அதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். முதலாவதாக வேறு எந்த தெய்வத்தையும் பிடித்த உடன் உருவம் கொண்டு வரமுடியாது. விநாயகப் பெருமானை மட்டும்தான் மஞ்சலிலோ அல்லது பசுஞ்சாணத் திலோ அல்லது சந்தனத்தில் பிடித்தவுடன் உருவம் வரக்கூடிய ஒரே கடவுள் விநாயகப் பெருமான். பிடியதன் உருவுமை அதனுடைய அர்த்தம். பிடித்தவுடன் உருவம் வரக்கூடிய கடவுள் என்று அர்த்தம்.

சிவபெருமானுக்கே தடை வருகிறது!

இந்த விநாயகப் பெருமானை சிவபெருமானே தினசரி படியளக்க செல்லும் பொழுது வணங்கிவிட்டுத்தான் செல்வார். ஒரு நாள் ஒரு அவசர வேலையாக விநாயகருக்கு பூஜை செய்ய மறந்து செல்கிறார். அந்த காரியம் சிவபெருமானுக்கு தடை வருகிறது. சிவபெருமானுக்கே தடைபடும்போது நமக்கெல்லாம்? எந்த காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக விநாயகர் வழிபாடு செய்தால் எந்த தடங்கலும் வராது.

விநாயகப் பெருமான் கணங்களின் அதிபதி

ganapathy-homam-tamil

விநாயகப் பெருமான் கணங்களின் அதிபதி: கணங்கள் என்றால் இரண்டு கணங்கள் இருக்கிறது. தேவகணங்கள் பூதகணங்கள் என்று இரண்டு இருக்கிறது. தேவகணங்கள் நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களுக்கு  நல்லது செய்வதற்காகவே வரும் பூதகணங்கள். பூதகணங்கள் நாம் செய்யக்கூடிய காரியங்களுக்கு தடைகள் செய்வதற்கென்றே வரும். ஆனால் இரண்டிற்குமே அதிபதி விநாயகப் பெருமான். அப்படி விநாயகர் வழிபாடு செய்தால் பூதகணங்கள் நம்முடைய தளபதியை வணங்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்கக்கூடாது என்று எந்த தடங்களும் நமக்கு கொடுக்க மாட்டார்கள்.

வேர் அறுக்க வல்லோனே ..!

மத்த சுவாமிகள் எல்லாமே பிரச்சனைகள் என்றால் அந்த இடத்தில் மட்டும் தான் தீர்த்து வைப்பார்கள் ஆனால் இந்த விநாயகப் பெருமான் மட்டும் தான் பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று வேரோடு அறுத்து விடுவார். வேர் இருந்தால்தான் வளரமுடியும் அதற்காகத்தான் வேர் அறுக்க வல்லோனே என்று நாம் சொல்லுகின்றோம். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு சிறப்பான முறையிலே கணபதி ஹோமம் செய்தால் விநாயகருடைய பரிபூரண அருளும் ஆசியும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் என்றென்றும் கிடைக்கும்.